பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் தொழிற்சாலை காவல்நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
Hajipur: பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான, 1000 பெட்டிகள் அடங்கிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, திவான்டோக் என்ற கிராமத்தில் உள்ள 5 வீடுகளில் இருந்து பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டதாக பாட்டில் லேபிள்களில் குறிப்பிடப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் தப்பிசென்றுள்ளனர். அவர்களை தீவிரமாக தேடிவருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் 11 வாகனங்களில் ஏற்றப்பட்டு தொழிற்சாலை பகுதி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பீகாரில் கடந்த ஏப்ரல் 2016ல் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு மது அருந்துவது மற்றும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.