Read in English
This Article is From Oct 31, 2018

படேல் சிலை திறப்பை காண வாரணாசியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த மக்கள்!

பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் படேலின் சிலையினை திறந்து வைப்பதைக் காண, 1000 பேர் ரயிலில் நேற்று வாரணாசியிலிருந்து புறப்பட்டு இன்று குஜராத்தினை அடைந்தனர்

Advertisement
இந்தியா

பிரதமர் மோடி இன்று 182 அடியில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலையினை திறந்து வைத்தார்.

New Delhi:

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் 1000 பேர் குஜராத்தின் நர்மதா மாவட்டத்திற்கு சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பினைக் காண வருகை புரிந்துள்ளனர். இன்று சர்தார் வல்லபாய் படேல் 143 பிறந்தநாளை முன்னிட்டு, 182 அடியில் அமைக்கப்பட்டுள்ள அவரது திறக்கப்பட்டதாக பிடிஐ-யிடம் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இரு மடங்கு பெரியது சர்தார் வல்லபாய் படேல் சிலை. இந்த சிலையை கட்டமைக்க நாடு முழுவதிலிமிருந்து இரும்பு கொண்டு வரப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் படேலின் சிலையினை திறந்து வைப்பதைக் காண, 1000 பேர் ரயிலில் நேற்று வாரணாசியிலிருந்து புறப்பட்டு இன்று குஜராத்தினை அடைந்தனர். சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே துறையின் செய்தி தொடர்பாளர் தீபக் குமார் பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

Advertisement

மேலும், குஜராத்திலிருந்து ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு ஒற்றுமை சுட்டிக்காட்டப்பட்டது என்று குமார் கூறினார்.
 

Advertisement