பார்சலில் உயிருடன் வந்த 1,000 எறும்புகள் கொண்ட பார்சலை பறிமுதல் செய்யப்பட்டது (Representative Image)
பிரிட்டனில் இருந்து பார்சலில் உயிருடன் வந்த 1,000 எறும்புகள் கொண்ட பார்சலை பறிமுதல் செய்யப்பட்டது என்று மத்திய சீன சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு தீனியாக சமீபகாலமாக உயிருள்ள எறும்பினை கொடுப்பது வழக்கமாகிவருகிறது.
ஹுனான் மாகாணத்தின் சுங்க அதிகாரிகள், சோதனைக் குழாய்கள் மூலம் இந்த எறும்புகளை அறுவடை செய்தனர். இந்த எறும்புகள் 1.4 செ.மீ நீளம் கொண்டவை. கறுப்பு மற்றும் சிவப்பு எறும்பு ராணி எறும்புகள் இவையென தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் உயிருள்ள எறும்பினை உணவாக கொடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் சீனாவில் பார்சல் மூலமாக உயிருள்ள விலங்குகளை அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டை சேராத எறும்புகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் அனுப்பியது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவில் மின்னனு வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில் செல்லப்பிராணிகள், பாம்புகள் , பூச்சிகள் கூட இதன் வழி அனுப்பப்படுகிறது. இது சட்டவிரோதமான கடத்தலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news