Read in English
This Article is From Jul 16, 2019

அசாமில் 1.17 லட்சம் மக்கள் அயல்நாட்டினர் : தீர்ப்பாயங்கள் கொடுத்த கணக்கீடு

டிசம்பர் 17, 2014 அன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

Advertisement
இந்தியா Edited by

அசாமில் 100 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன என்று கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.

New Delhi:

இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 1.17 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்று அசாமில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் இதை அறிவித்துள்ளது என்று அசாம் மாநில உள்துறை அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.  அசாமில் 100 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன என்று கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மார்ச் 31, 2019 வரை மொத்தம் 1,17,164 பேர் தீர்ப்பாயத்தினால் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி அப்துல் கலேக்கின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் ( 'D' voters )என்று தீர்ப்பாயங்கள் சொல்லவில்லை என்றும், தீர்ப்பாயங்கள் தீர்ப்பளிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மாதந்தோறும் மாறுபடும் என்று ரெட்டி தெரிவித்தார்.

Advertisement

வெளிநாட்டினர்  தீர்ப்பாயங்கள் (1964) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின் படி தீர்ப்பாயங்கள் செயல்படுகின்றன. 

டிசம்பர் 17, 2014 அன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்று தீர்ப்பளித்தது. 

Advertisement

தீர்ப்பாயத்தின் முடிவு திருப்தி அடையாத ஒரு நபருக்கு உயர் நீதிமன்றங்களை நாட உரிமையுண்டு. குடியுரிமைக்கான உரிமை கோரலை நிரூபிக்க அனைவருக்கும் முழுவாய்ப்பு வழங்கப்படுகிறது என்று கிஷான் ரெட்டி கூறினார். 

Advertisement