This Article is From Jun 23, 2020

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1,340 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன!!

பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை  இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இவற்றில் 3 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1,340 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன!!

மொத்தம் தயாரிக்கப்படவுள்ள 50 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 30 ஆயிரம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டால் அளிக்கப்படும்.

ஹைலைட்ஸ்

  • பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் இந்தியாவில் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன
  • மொத்தம் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க திட்டம்
  • ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வென்டிலேட்டர் வழங்கப்பட்டு வருகிறது
New Delhi:

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1,340 வென்டிலேட்டர்கள் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஜூன் மாத இறுதிக்குள் மேலும் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி முடிந்து விடும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை  இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இவற்றில் 3 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன.  அவற்றில் 1,340 வென்டிலேட்டர்கள் மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வென்டிலேட்டர் தயாரிக்கும் வகைக்காக ரூ.2,000 கோடி மே 14-ம்தேதி பி.எம்.கேர்ஸில் இருந்து ஒதுக்கப்பட்டது. 

இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து முடிக்கப்படும். இவற்றில் 275 மகாராஷ்டிராவுக்கும், 275 டெல்லிக்கும், 175 குஜராத்திற்கும், 100 பீகாருக்கும், 90 கர்நாடகாவுக்கும், 75 ராஜஸ்தானுக்கும் வழங்கப்படும். 

மொத்தம் தயாரிக்கப்படவுள்ள 50 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 30 ஆயிரம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டால் அளிக்கப்படும்.

மற்ற 20 ஆயிரம் வென்டிலேட்டர்களை அக்வா ஹெல்த்கேர், ஏ.எம்.டி.ஸெட். பேசிக், ஏ.எம்.டி.எஸ். ஹை என்ட், அலைடு மெடிக்கல் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கும். 

முன்னதாக வெளிமாநில தொழிலாளர்கள் நலனுக்காக ரூ. 1,000 கோடி பி.எம். கேர்ஸில் இருந்து ஒதுக்கப்பட்டது. இந்த தொகையில் மகாராஷ்டிரா ரூ. 181 கோடி, உத்தரப்பிரதேசம் ரூ. 103 கோடி, தமிழ்நாடு 83 கோடி, குஜராத் 66 கோடி, டெல்லி ரூ. 55 கோடி, மேற்கு வங்கம் ரூ. 53 கோடி, பீகார் ரூ. 51 கோடி, மத்திய பிரதேசம் ரூ.  50  கோடி, ராஜஸ்தான் ரூ. 50 கோடி, கர்நாடகா ரூ. 34 கோடியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 27-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பி.எம்.கேர்ஸ் என்ற அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு, உள்துறை, நிதித்துறை அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.