This Article is From Nov 05, 2018

சபரிமலையில் நாளை நடை திறப்பு: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் குவிப்பு!

சபரிமலை கோவில் செல்ல விரும்பும் பெண்கள் போலீசாரை அணுக வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சபரிமலையில் நாளை நடை திறப்பு: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் குவிப்பு!

போலீஸ் பாதுகாப்புடன் கடந்த மாதம் சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தனர்.

Thiruvananthapuram:

சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் 144 தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மீண்டும் சபரிமலை நடை திறப்பதால், வலதுசாரி ஆர்வலர்கள் வன்முறை மற்றும் போராட்டத்தில் ஈடுபடலாம் என தெரிகிறது. இதனால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய் இரவு வரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் டி.நாராயணன் கூறும்போது, சபரிமலை கோவிலை சுற்றியும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏ.டி.ஜி.பி. அனில்காந்த் தலைமையில், பாதுகாப்பு பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஊடகவியலாளர்கள் மீண்டும் கோவில் நடை திறக்கும் நாள் வரை கோவிலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க நிலக்கல்லுக்கு செல்லும் வழியில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், போலீசார் தவிர்த்து, 20 பேர் கொண்ட கமாண்டோ குழுவினரும் சன்னிதானம், நீலக்கல் மற்றும் பம்பா உள்ளிட்ட பகுகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, மாதாந்திர பூஜைக்காக கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 5 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறந்திருந்தது. அப்போது சன்னிதானம் செல்லமுயன்ற பெண்களை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தடுத்தனர். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3,701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோவில் செல்ல விரும்பும் பெண்கள் போலீசாரிடம் அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் யாராவது முன் வந்தால், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதை தான் போலீசார் பார்ப்பார்கள், என்று அவர் கூறினார்.

.