Read in English
This Article is From Jul 08, 2018

மும்பை கனமழை எதிரொலி: சின்சோத்தி நீர்விழ்ச்சியில் ஒருவர் பலி!

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பைக்கு அருகில் இருக்கும் சின்சோத்தி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக ஒருவர் இறந்துள்ளார்

Advertisement
நகரங்கள்
Mumbai:

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பைக்கு அருகில் இருக்கும் சின்சோத்தி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக ஒருவர் இறந்துள்ளார்.

மும்பையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் துங்கரேஷ்வர் வனப்பகுதியில் அமைந்துள்ளது சின்சோத்தி நீர்வீழ்ச்சி. பருவ மழை காலங்களில் இங்கு மக்கள் அதிகம் கூடுவர். கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சின்சோத்தி நீர்வீழ்ச்சியிலும் அதிக நீர் வரத்து இருந்துள்ளது.

இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்துள்ளனர். அங்கு வந்திருந்த பவேஷ் குப்தா என்ற 35 வயது மதிக்கத்தக்கவர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் 12 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விஷயத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், சுமார் 100 சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

கனமழை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
 

Advertisement