மேக் இன் இந்தியா, டிஜிட்டல் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
Tokyo: இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து புகழ்ந்து பேசிய அவர், ஒரு சிறு பாட்டில் குளிர்பானத்தைவிட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக இருப்பதாகவும் பெருமிதமாக கூறினார்.
13வது இந்தியா - ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, ஜப்பான் வாழ் இந்தியர்களை சந்தித்து பேசினார்.
தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா அபரிமித வளர்ச்சி பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று இந்தியா டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. பிராட்பேண்ட் இணைப்பை இந்திய கிராமங்களில், 100 கோடிக்கும் அதிகமானோர் செல்போனில் பயன்படுத்துகின்றனர். ஒரு சிறு பாட்டில் குளிர்பானத்தைவிட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக இருப்பதாகவும் பெருமிதமாக கூறினார்.
மேலும், தற்காப்பு கலையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஜப்பானில், கபடி மற்றும் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துவதற்காக இந்திய புலம்பெயர்ந்தோரை பிரதமர் மோடி பாராட்டினார்.