This Article is From Nov 11, 2018

சத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல்: 1 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவேயிஸ்ட்டுகள் அதிகமாக நடமாடும் எட்டு மாவட்டங்களில் 18 இடங்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது

சத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல்:  1 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு!

சிபிஆர்எஃப் போன்ற துணை ராணுவ வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.

Raipur:

சத்தீஸ்கரில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக 1 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த காவல் அதிகாரி கூறினார். முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி டிஎம். அவஸ்தி பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

மேலும், கடந்த பத்து நாட்களில் பாஸ்டர் மற்றும் ராஜ்நந்தகன் மாவட்டங்களில் 300 வெடிகுண்டுகளை கண்டெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்ட்டுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடைசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். துணை ராணுவமான சிபிஆர்எஃப், பிஎஸ்எஃப், ஐடிபிபி- வீரர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து 65,000 காவல் படை வீரர்களை மத்திய அரசு தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறினார்.

இந்திய விமானப் படை மற்றும் பிசிஎஃப்-ன் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது தங்களுக்கு இருக்கும் சவால், வாக்குபதிவு மையங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாகும் என்று கூறியுள்ளார்.

.