This Article is From Feb 22, 2020

ஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு!!

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லி ஷாஹின் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது.

ஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு!!

சாலை திறப்பு காரணமாக ஷாஹின் பாக் பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

New Delhi:

தலைநகர் டெல்லியில் ஷாஹின் பாக் போராட்டம் காரணமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சாலைகளில் ஒன்று 2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

சாலை திறக்கப்பட்டதன் காரணமாக டெல்லி மற்றும் நொய்டா இடையில் வாகனத்தில் செல்பவர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு குறைந்துள்ளது. 

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதில் ஷாஹின் பாக் போராட்டம் முதன்மையாக கருதப்படுகிறது. 

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறத்தியும் ஷாஹின் பாக்கில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 

ஷாஹின் பாக் போராட்டத்தை இஸ்லாமிய பெண்கள் முன்னின்று நடத்தினர். சாலையை மறித்து போராட்டம் நடத்தப்பட்டதால் டெல்லி - நொய்டா பகுதியில் வசிப்பவர்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர் என்று பாஜக விமர்சித்திருந்தது. 

மாற்று வழிகளை போலீசார் சரிவர கையாளாதது ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஷாஹின் பாக் போராட்டத்தால் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாலைகளில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாக ஷாஹின்பாக் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கனில் இருந்து வரும் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் உறுதி அளிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அவர்கள், இந்த நடவடிக்கை முதன்முறையாக குடியுரிமையை பரிசோதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும் குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது 3 நாடுகளில் மத ரீதியில் அச்சுறுத்தலுக்கு ஆளாகுவோருக்கு குடியுரிமை அளிக்க உதவும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

.