$10,000 டிப்ஸ் உடன் அலிநா கஸ்டர்
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினாவில் அமைந்திருக்கும் உணவகத்திற்கு வந்த ஒருவர் இரண்டு கிலாஸ் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு 10,000 டாலர் டிப்ஸ் கொடுத்து சென்றார்.
இதைக் கண்டு திடுக்கித்த பெண் பணியாளர் அலிநா கஸ்டர் உடனடியாக தனது மேல் அதிகாரியிடம் தெரிவித்தார். மேலும் 10,000 டாலர் டிப்ஸ் கொடுத்து சென்ற அந்த நபர் ‘'சுவையான தண்ணீருக்கு நன்றி'' என்ற குறிப்புடன் பணத்தை வைத்து சென்றதாக தகவல்.
‘'முதலில் யாரோ என்னுடன் விளையாடுகிறார்கள் என்றுதான் நினைச்தேன். பிறகு நூறு டாலர்கள் கட்டை கண்டபோது நான் நடுங்கிவிட்டேன்'' என பத்திரிகையாளர்களிடம் அலிநா கஸ்டர் கூறினார்.
இந்தக் காரியத்தை செய்தது யூடியுப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட் என நம்பப்டுகிறது. மிஸ்டர் பீஸ்ட்க்கு யூடியுபில் 8.9 மில்லியன் பின் தொடர்வோர்கள் உள்ளனர்.
பணத்தை உணவகத்தில் கொடுத்து சென்ற பின்பு அங்கே மீண்டும் வந்த மிஸ்டர் பீஸ்ட், அங்கு பணி செய்பவர்களுடன் உரையாடினார்.
‘'திடீரென கிடைத்த இந்த டிப்ஸ் பணம் எனது படிப்பிற்க்கு ஆகும் செலவுகளை சமாளிக்க உதவும். இதை என்னால் நம்ப முடியவில்லை என்றாலும் இப்பணம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே'' என்றார் புன்னகையுடன்.
Click for more
trending news