This Article is From May 19, 2020

10ம் வகுப்பு தேர்வு தேதிகளில் மாற்றம்! ஜூன் 10 முதல் தேர்வுகள் தொடங்கும்!!

 ஜூன்1 தொடங்க இருந்த தேர்வுகள் ஜூன் 10 முதல் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 10 தொடங்கி 25 வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும், மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வு தேதிகளில் மாற்றம்! ஜூன் 10 முதல் தேர்வுகள் தொடங்கும்!!

தேசிய அளவில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 1-ம் தேதியன்று தேர்வு நடைபெறும் என மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் பலர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியுடனான கலந்தாலோசனைக்குப் பின்னர் தற்போது செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜூன்1 தொடங்க இருந்த தேர்வுகள் ஜூன் 10 முதல் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 10 தொடங்கி 25 வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும், மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 3,825 என இருந்த தேர்வு மையங்கள் தற்போது 12,690 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என்கிற விகிதத்தில் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 5 கி.மீ தொலைவுகளிலேயே மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள புதிய அட்டவணை
  • 15.06.2020   மொழிப்பாடம்
  • 17.06.2020   ஆங்கிலம்
  • 19.05.2020   கணிதம்
  • 20.05.2020   விருப்ப மொழி
  • 22.05.2020   அறிவியல்
  • 24.05.2020   சமூக அறிவியல்
  • 25.05.2020   தொழில்கல்வி தேர்வு

.