This Article is From Jan 09, 2019

அஹமதாபாத்தில் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - 10 சுவாரஸ்யங்கள்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் விரைவில் குஜராத்தில் திறக்கப்படவுள்ளது

Advertisement
Sports Posted by

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் விரைவில் குஜராத்தில் திறக்கப்படவுள்ளது. மோடேராவில் சர்தார் பட்டேல் மைதானம் என்ற பெயரில் உருவாகும் இந்த மைதனாத்தின் புகைப்படங்களை குஜராத் கிரிக்கெட் வாரிய துணை தலைவர் நத்வானி வெளியிட்டார். மேலும் அந்த  பதிவில் நாட்டின் பெருமையை பறைசாற்றும் கனவு திட்டம் இது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மைதானம் குறித்த 10 சுவாரஸ்யங்கள்:

1. இந்த மைதானத்துக்கு ஜனவரி 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது

Advertisement

2. இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் கனவு திட்டம். இதனை குஜராத் கிரிக்கெட் வாரியம் செயல்படுத்துகிறது.

3. எல்&டி நிறுவனம் தான் இந்த மைதானம் கட்ட ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்புகளுக்கு பாப்புலஸ் நிறுவனம் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

Advertisement

4. தற்போது உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்பெர்ன் மைதானத்தை கட்டமைக்க உதவியது பாப்புலஸ் நிறுவனம் தான்.

5. 63 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த மைதானத்தில் 1.1 லட்சம் பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும். ஏற்கெனவே பெரிய மைதானமாக உள்ள மெல்பெர்னில் 90,000 பேர் தான் அமர்ந்து ஆட்டத்தை பார்க்க முடியும்.

Advertisement

6. இந்த மைதானத்தை கட்டிமுடிக்க ஆகும் செலவு 700 கோடி ஆகும்.

7. இந்த மைதானத்தில் 4 பெவிலியன்கள், 50 அறைகள் மற்றும் 76 கார்ப்பரேட் பாக்ஸ்கள், ஒரு நீச்சல்குளம் ஆகியவை உள்ளன.

Advertisement

8. இதில் ஒரு உள்விளையாட்டு கிரிக்கெட் பயிற்சி அகடாமியும் அமைக்கப்பட உள்ளது.

9. இந்த மைதானத்தில் 3000 நான்கு சக்கர வாகனங்களையும், 10,000 இரு சக்கர வாகனங்களையும் பார்க் செய்யலாம்.

Advertisement

10. இதற்கு முன் மொடேரா மைதானத்தில் 54,000 பேர் தான் ஆட்டத்தை ரசிக்க முடியும் என்று இருந்தது. இதை குஜராத் கிரிக்கெட் வாரியம் மேம்பாட்டுக்காக 2016ம் ஆண்டு இடித்தது.
 

Advertisement