காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Jodhpur: ஜோத்பூர் அருகே இரண்டு வாகனங்கள் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் 16 உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாலேசார் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி கூறும்போது, மினி பேருந்து ஒன்றின் டயர் வெடித்து, எதிரே வந்த பொலீரோ கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 5 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.