This Article is From Jan 07, 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் உயர்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா நாளை தாக்கல் செய்யப்படலாம்

New Delhi:

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய அரசு விரைவில் திருத்தம் கொண்டு வரவுள்ளது.

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யக்கோரும் மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக மத்திய அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்படுதல் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் வழிகாட்டியாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனைப்படியே இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் பாஜக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரசிடம் பாஜக ஆட்சியை இழந்தது. இந்த சூழலில் தான் பொருளாதாரத்தின் பின் தங்கியிருக்கும் உயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.
 

.