Read in English
This Article is From Mar 07, 2019

தந்தையின் இறுதி சடங்கு செலவுக்காக கொத்தடிமையாக விற்கப்பட்ட 10 வயது சிறுவன்!

கொத்தடிமையாக ஆடுகள் மேய்த்த வந்த 10 வயது சிறுவன் மூன்று மாதங்களுக்கு பின், மீட்கப்பட்டுள்ளான்.

Advertisement
தமிழ்நாடு Edited by

கொத்தடிமையாக விற்கப்பட்ட சிறுவனை வருவாய்துறை அதிகாரிகள் அதிகாரிகள் மீட்டனர்.

Thanjavur, Tamil Nadu:

தஞ்சாவூர் அருகே கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்குக்காக பெற்ற ரூ.36,000 கடனுக்காக சிறுவன் கொத்தடிமையாக விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமம் ஒன்றில் கொத்தடிமையாக இருந்து ஆடுகளை ஒரு சிறுவன் மேய்த்து வருவதாக சைல்டுலைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதையடுத்து, ஆர்டிஓ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சிறுவனை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சிறுவனை மீட்ட என்ஜிஓ அமைப்பு என்டிடிவியிடம் கூறும்போது, பட்டுகோட்டை அருகே கஜா புயலின் போது சிறுவனின் தந்தை உயிரிழந்த நிலையில், இவர்களது வீடும் இடிந்து விழுந்துள்ளது. கணவரின் இறுதி சடங்கிற்காக சிறுவனின் தாய் உள்ளூர் தொழிலதிபர் ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி அடைக்க முடியாத காரணத்தினால் தனது மகன்களில் ஒருவரை அவர் கொத்தடிமையாக விற்றுள்ளார்.

5ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் விற்கப்பட்ட நிலையில், இரவு, பகலாக 200 ஆடுகளை மேய்த்து வந்துள்ளான். சிறுவன் தங்குவதற்கு என்று எந்த இடமும் கொடுக்கவில்லை. 24 மணிநேரமும் சிறுவன் ஆடுகளுடனே இருந்து வந்துள்ளான். கடந்த இரண்டு மாதங்களாக சிறுவனுக்கு காலையில் ஒரு கிண்ணம் கஞ்சி மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டு வந்துள்ளது என்று கூறினர்.

Advertisement

இது தொடர்பாக என்டிடிவி சிறுவனின் தாயிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சிறுவனை கொத்தடிமையாக நடத்திய தொழிலதிபர் மகாலிங்கம் தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி என்டிடிவியிடம் கூறும்போது, சிறுவனுக்கு உடனடி நிவாரணமாக ரூ20,000 வழங்குவதற்கும், குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்து கல்வி, மறுவாழ்வு அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் உடனடியாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு கஜா புயல் நிவாரண நிதியான ரூ.2லட்சம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement