Puducherry: புதுச்சேரி: டெல்லி துணை நிலை ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அரசின் ஆலோசனை வழியே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என ஆம் ஆத்மியினர் தொடர்ந்த வழக்கிற்கு தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.
இதேப் போன்று புதுச்சேரியிலும் அரசுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் பல மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக பாண்டிச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்திருக்கிறார்.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்” என இதுப்பற்றை கூறியிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. மேலும், தீர்ப்பை ஏற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்படா விட்டால், அவர் மீது வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.