This Article is From Mar 24, 2020

டெல்லியில் ஊரடங்கை மீறியதாக 100 பேர் மீது வழக்குப் பதிவு

Coronavirus effect: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் அனில் பைஜல் ஆகியோர் டெல்லியில், பொது போக்குவரத்தை மூடக்குவது, எல்லைகளுக்கு சீல் வைப்பது, கடைகளை மூடுவது மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே அனுமதிப்பது.ஞாயிற்றுக்கிழமை கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தனர்.

டெல்லியில் ஊரடங்கை மீறியதாக 100 பேர் மீது வழக்குப் பதிவு

4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • ஊரடங்கு உத்தரவை மீறியதாக 100 பேர் மீது வழக்குப் பதிவு
  • 340க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல்
New Delhi:

வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து, டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த கட்டுபாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில், பெரும்பாலான வழக்குகள் கடைக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை 340க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 490க்கும் மேறப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி, சுய ஊரடங்கை கடைப்பிடிக்கமாறு வலியுறுத்திய நிலையில், அன்று மாலை முதல் இந்த விதிகளை மீறிவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் அனில் பைஜல் ஆகியோர் டெல்லியில், பொது போக்குவரத்தை மூடக்குவது, எல்லைகளுக்கு சீல் வைப்பது, கடைகளை மூடுவது மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே அனுமதிப்பது.ஞாயிற்றுக்கிழமை கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தனர். 

இந்தியாவில் மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் 30க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து இருந்தார். பலரும் ஊரடங்கு உத்தரவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்,” என மோடி தெரிவித்திருந்தார். 

.