Read in English
This Article is From Jun 17, 2019

பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு 100 குழந்தைகள் உயிரிழப்பு!

ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் எஸ்.கே.சாஹி கூறும்போது, பருவமழை மட்டுமே நோயிலிருந்து விடுபெற வைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
Patna, Bihar:

பீகாரில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதில், உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆக தற்போது அதிகரித்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும், 83 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தவிர அங்குள்ள கெஜ்ரிவால் மருத்துவமனையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 290 குழந்தைகள் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

Advertisement

இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பீகாரின் முசாபர்பூர் கிருஷ்ணா மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேற்று ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

Advertisement

வடமாநிலங்களிலே, அங்கு அதிகபட்ச வெப்பநிலை காணப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக, 48 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் மேலாக பதிவாகி வருகிறது.

Advertisement