Read in English
This Article is From Jul 07, 2018

சிம்னிகள் மூலம் குகைக்குள் சீக்கியுள்ள சிறுவர்களை மீட்கத் திட்டம்!

தாய்லாந்து நாடு “வைல்டு போர்” குழுவை சேர்ந்த 12 இளம் கால்பந்து வீரர்கள், கடந்த இரண்டு வாரங்களாக குகைக்குள் சிக்கி கொண்டுள்ளனர்

Advertisement
உலகம்
Mae Sai, Thailand:

தாய்லாந்து: தாய்லாந்து நாடு “வைல்டு போர்” குழுவை சேர்ந்த 12 இளம் கால்பந்து வீரர்கள், கடந்த இரண்டு வாரங்களாக குகைக்குள் சிக்கி கொண்டுள்ளனர்.

பயிற்சியாளருடன் சென்ற இளம் வீரர்களை, வெள்ளம் சூழ்ந்து கொண்டதால், குகைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

நூறுக்கும் மேற்பட்ட சிம்னிகளைக் கொண்டு மலை ஓரங்களில் துளையிட்டு குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்

“400 மீட்டர் நீளமுள்ள சிம்னிகளை அனுப்பியுள்ளோம். ஆனால், குகைக்குள் சிக்கியவர்களின் சரியான இடத்தை நெருங்க முடியவில்லை” என்று மீட்பு குழுவை சேர்ந்த நரோங்சக் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், “இளம் வீரர்கள், 600 மீட்டர் உள்ளே சிக்கி கொண்டிருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. எனினும், சரியான தூரத்தை கணக்கிட முடியவில்லை” என்றார். குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால், ஆக்ஸிஜன் குழாய்களை அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement