This Article is From Nov 22, 2018

“புயல் பாதிப்பு பகுதியில் 100 லாரி நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளோம்’‘- மு.க.ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 100 லாரி நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
தெற்கு Posted by

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயலில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகளை பொறுத்தவரையில் மக்கள் தன்னெழுச்சியாக நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் உதவிப் பொருட்கள் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சென்றடைந்து வருகின்றன. இருப்பினும் 11 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் சேதம் அடைந்திருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிலைமையை சீரமைக்க ரூ. 15 ஆயிரம் கோடி தேவை என்று தமிழக அரசு சார்பாக மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பாக கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 லாரி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கஜா புயல் பாதிக்காத மாவட்ட கழகங்கள் அனுப்பிய ரூ. 4 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கொண்ட 100 லாரிகளை டெல்டா மக்களுக்கு அனுப்பி வைத்தாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க - "‘கஜா புயலால் 63 பேர் உயிரிழப்பு!'- பிரதமரை சந்தித்த பின் முதல்வர் தகவல்"

Advertisement
Advertisement