Read in English
This Article is From Oct 31, 2019

ஒரு லட்சம் கோடி மதிப்பில் 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்

2025 ஆம் ஆண்டில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையவும் உள்கட்டமைப்பு திட்டங்களை இரட்டிபாக்க பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார்.

Advertisement
இந்தியா (c) 2019 BloombergEdited by

அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்களை உருவாக்க இந்திய அரசு 1 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்யவுள்ளது

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதார வளர்ச்சியை புதுப்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 2024க்குள் 100 கூடுதல் விமான நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் 1,000 புதிய வழித்தடங்களைத் தொடங்குவது உள்ளிட்டவை இந்த திட்டத்தில் அடங்கும். கடந்த வாரம் 2025க்குள் தேவையான உள்கட்டமைப்புகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

ஆறு ஆண்டுகளில் குறைந்த பொருளாதார செயல்பாடு மற்றும் மேலும் மந்த நிலைக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் வளர்ச்சியை புதுப்பிக்கவும், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையவும் உள்கட்டமைப்பு திட்டங்களை இரட்டிபாக்க பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார். வியட்நாம் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் போட்டியிட இந்தியா பெருநிறுவன வரிவிகிதங்களை அரசாங்கம் குறைத்தது. 

இந்தியாவின் சிந்தனைக் குழுவின் முன்மொழிவில் உள்நாட்டில் பயிற்சி பெற்ற விமானிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 600 ஆக உயர்த்துவதும் உள்நாட்டு விமானக் கடற்படையை 1,200 ஆக இரட்டிப்பாக்குவதும் அடங்கும் என்று மக்கள் தெரிவித்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்களை உருவாக்க இந்திய அரசு 1 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஓடுபாதைகளில் 75 மட்டுமே செயல்பட்டன. இந்தியா ட்ரோன்களின் பயன்பாட்டை இந்தியா ஊக்குவிக்கும். ட்ரோன்கள் தரையிரங்குவதற்கு ஏற்ற வகையில் ஓடுபாதைகள் விரைவில் அமைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

Advertisement



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement