மேலும் சத்தீஸ்கரின் நாயா ராய்பூர் என்ன இடமும் அடல் நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
New Delhi: கடந்த ஆகஸ்டு மாதம் மறைந்த, பா.ஜ .க வின் மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயின் முகம் பதித்த 100 ரூபாய் மதிப்புள்ள புதிய நாணயங்களை வெளியிட்டார். அதை தொடர்ந்து அவர் பேசுகையில் ‘அடல் ஜி, இனி நம்முடன் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை' என கூறினார்.
புதிய நாணயங்களை வெளியிட்டு பிரதமர் மோடி பேசுகையில் ‘ வாஜ்பாய் அவர்களை நாடு முழுவதும் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் நேசித்தனர், மேலும் வாஜ்பாய் அவர்கள் எதிர்கட்சியாக அமர்ந்து இருக்கும்போது கூட மக்களுக்கான குரலாகத்தான் இருந்தார், ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலைகளில், ஒருவர் 2-5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இல்லை என்றால் அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை' என கூறினார்.
இந்த புதிய நாணயத்தின் வெளியிட்டு விழாவில் பா.ஜ.க வின் தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த நிர்வாகி எல்.கே. அத்வானி மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லீ மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும் வெளியிடப்பட்ட இந்த நாணயத்தில் முன்னாள் பிரதமரான வாஜ்பாயின் முகத்துடன், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் பெயர் வெளியிட்டுள்ளது. 35 கிராம் எடைகொண்ட இந்த நாணயத்தில் வாஜ்பாயின் பிறப்பு மற்றும் இறப்பு வருடங்களான 1924 மற்றும் 2018 பொறிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, தனது 93 வயதில் இறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், 1996-ல் 13 நாட்கள் ஆட்சியுலும், 1998-ல் 13 மாதங்களும் 1999 முதல் சுமார் 6 வருடங்குளுக்கு பரதமாரக இருந்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு சமர்பணமாக பல இடங்களுக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டு வருகிறது. இமாலயத்தில் உள்ள நான்கு சிகரங்களுக்கு வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட உள்ளது. மேலும் சத்தீஸ்கரின் நாயா ராய்பூர் என்ன இடமும் அடல் நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.