கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இன்று 103 பேர் கொரோனா குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்
- புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- மொத்தம் 1,323 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இன்றுமட்டும் 103 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது தமிழகத்தில் மொத்தம் 1,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
முதன்முறையாக அறிக்கை மூலம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று சுகாதாரத்துறை அறிக்கை வாயிலாகப் பாதிப்பு நிலவரங்களைத் தெரிவித்துள்ளது.
புதிதாகப் பாதிப்பு ஏற்பட்ட 56 பேரில் 17 பேர் தஞ்சை மாவட்டத்தையும், 11 பேர் சென்னையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் அதிகபட்சமாகச் சென்னையில் 228 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று 25 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 56 யை கடந்திருப்பது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.