Read in English
This Article is From Nov 07, 2018

106 வயதில் குடியுரிமை: இதுவரை ஓட்டே போடாத அமெரிக்க பாட்டி

பொனிலா 1912ம் ஆண்டு மத்திய அமெரிக்க பகுதியான எல் சால்வேடாரில் பிறந்தவர். இவருக்கு 18 குழந்தைகள் இவரது இளைய மகளின் வயது 55.

Advertisement
News (c) 2018 The Washington Post

2002ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவர் தனது பேரக்குழந்தைகளுடன் காலத்தை கழிக்க விரும்பினார். அவரது பேத்தி சமீபத்தில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தார்.

Fairfax, USA:

பொனிலா 1912ம் ஆண்டு மத்திய அமெரிக்க பகுதியான எல் சால்வேடாரில் பிறந்தவர். அங்கு சோளம், அரிசி போன்றவற்றை பயிரிட்டு வந்தார் பொனிலா. இவருக்கு மொத்தம் 18 குழந்தைகள் இவரது இளைய மகளின் வயது 55. இவரது கணவர் இறந்துவிட்டார்.

பெண்கள் எல் சால்வேடாரில் 1939க்கு பின்பே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது பொனிலாவுக்கு வயது 27. அவர் வசிக்கும் பகுதியில் இருந்து வாக்குச்சாவடி அதிக தொலைவில் இருந்ததால் அவர் வாக்களிக்கவில்லை. அதன் பின் சான் சால்வடேருக்கு நகருக்கு குடிபெயர்ந்தார். அது குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதி. அங்கு வெளியில் நடப்பதே அபாயகரமான விஷயம். அங்கும் அவர் வாக்களிக்கவில்லை. 

2002ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவர் தனது பேரக்குழந்தைகளுடன் காலத்தை கழிக்க விரும்பினார். அவரது பேத்தி சமீபத்தில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தார். இவருக்கு இரண்டுமுறை மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்தார்.மருத்துவ காரணங்களை காரணம் காட்டி குடியுரிமை கேட்டார். அதற்கான பணிகள் முடிவுற்று அவருக்கு தேர்தல் நாள் அன்று குடியுரிமை வழங்கப்பட்டது. 

வீல்சேரில் வந்து குடியுரிமை வாங்கி அவர். இந்த தேர்தலில் ஓட்டு போட முடியவில்லை. கடவுள் மனது வைத்தால் அடுத்த முறை வாக்களிப்பேன். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement