Read in English
This Article is From May 06, 2019

18 லட்சம்பேர் எழுதிய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!!

CBSE 10th results: அதிகாரப்பூர்வ இணைய தளமான cbse.nic.in மற்றும் cbseresults.nic.in. ஆகியவற்றில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
Education Edited by

CBSE Result: கடந்த ஆண்டை விட சற்று முன்கூட்டியே இந்தாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

New Delhi:

18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

அவர்களில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்ஹவ கடந்த பிப்ரவரி 21-ம்தேதி தொடங்கி நடைபெற்றது. எழுத்து தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம்தேதி வரைக்கும் நடைபெற்றன.

இதனை 18 லட்சம் மாணவர்கள் மற்றும் 12.9 லட்சம் மாணவிகள் என 31 லட்சம்பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 

இந்தாண்டு 30 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வை எழுதியுள்ளனர்.

இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 21,400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாடுகளில் 225 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதனை 12 லட்சம் பேர் எழுதினார்கள். மற்ற முக்கிய பாடத்திட்டங்களான ஐ.சி.எஸ்.இ., மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகியவற்றை விட சிபிஎஸ்இ முன்கூட்டியே தனது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

Advertisement

சி.பி.எஸ்.இ. தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என 3 லட்சம்பேர் ஈடுபட்டிருந்தனர். 10 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்த்து மொத்தம் 31 லட்சத்து 14 ஆயிரத்து 821 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் 28 மாணவர்கள் திருநங்கைகள் ஆவர். 
 

மேலும் கல்விச் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்... Education News

Advertisement
Advertisement