This Article is From Aug 10, 2020

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது?

தேர்வாணைய இணையதளமான, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது?

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது?

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களாக தற்போது வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதன் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தள்ளிப்போனது. 

தொடர்ந்து, ஜூன் மாதத்தில் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அரசு தீவிரம் காட்டி வந்தது. இதற்காக இரண்டு முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்களின் வலியுறுத்தி வந்தனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் அளிக்கலாமா என்று குழப்பம் ஏற்பட்டது. பின்னர், மதிப்பெண் அடிப்படையிலே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலமும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். பள்ளிகளில் நேரில் சென்றும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தேர்வாணைய இணையதளமான, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.