This Article is From Jul 03, 2020

'11,300 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன' - மத்திய அரசு தகவல்

1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 72,293 ஆக்ஸிஜன் படுக்கைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

'11,300 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன' - மத்திய அரசு தகவல்

6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெற்றுள்ளன. 

ஹைலைட்ஸ்

  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படுகிறது
  • கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
  • மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்டவையும் தயாரித்து அனுப்பப்படுகின்றன

ஏப்ரல் மாதத்தில் இருந்து 2.02 கோடி N95 மாஸ்க்குகள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1.18 கோடி பி.பி.இ. கிட் எனப்படும் தனிநபர் பாதுகாப்பு கவச உடைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 6,154 வென்டிலேட்டர்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 72,293 ஆக்ஸிஜன் படுக்கைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெற்றுள்ளன. 

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு மட்டும் 20,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 18,213 பேர் மொத்தம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் 3,79,892 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். தற்போது 2,27,439 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாட, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. 
 
.