This Article is From Jul 01, 2018

டில்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி

புராரி சந் நகரை சேர்ந்த குடும்பத்தினர், மளிகை சாமான் மற்றும் ப்ளைவுட் கடை நடத்தி வருகின்றனர்

New Delhi:

புதுடில்லி: புதுடில்லி புராரி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர், வீட்டினுள் இறந்துள்ளனர்

இறந்த 11 பேரில், 7 பெண்களும், மூன்று சிறார்களும் அடங்கும். வழக்கு பதிவு விசாரணை செய்த காவல் துறையினர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.

புராரி சந் நகரை சேர்ந்த குடும்பத்தினர், மளிகை சாமான் மற்றும் ப்ளைவுட் கடை நடத்தி வருகின்றனர். வழக்கமாக காலை 6 மணிக்கு திறக்கப்படும் மளிகை கடை, 7.30 மணியாகியும் திறக்காத்தால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், குடும்பத்தினரை விசாரிக்க சென்றுள்ளார். கதவை திறந்து பார்த்ததில், சீலிங்கில் சிலர் தொங்கியபடியும், தரையில் சிலரும் இறந்து கிடந்துள்ளனர்.

உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

“அனைத்து விதமான கோணங்களிலும், தற்கொலையா அல்லது கொலையா என விசாரித்து வருகிறோம்” என்று கூட்டு ஆணையாளர் ராஜேஷ் குரானா தெரிவித்தார்.

.