This Article is From Nov 16, 2018

நள்ளிரவில் கரையை கடக்கும் கஜா புயல் குறித்த முக்கிய தகவல்கள்!

கஜா புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்கரையை ஒட்டி வசிக்கும் 12,000 மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

நள்ளிரவில் கரையை கடக்கும் கஜா புயல் குறித்த முக்கிய தகவல்கள்!

கஜா புயல் நாகப்பட்டினத்தில் நுழைந்தததாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.

Chennai:

கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் முன்னெச்சரிக்கையாக, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 12,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தலைநகர் சென்னையிலிருந்து 300கிமீ தொலைவில் இருக்கும் நாகப்பட்டினத்தை கஜா புயல் நெருங்கியுள்ளது.

கஜா புயல் கரையை கடக்க மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரை ஆகும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். மேலும் அவர், தீவிர புயலான கஜா தற்போது நாகைக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே 85 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு 12 மணி முதல் 3க்குள் கரையை கடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகமானது 100 முதல் 110 கி.மீ வரை பலமாக வீசக்கூடும். சமயங்களில் 120 கி.மீ வரை வீசக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மாநில அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 6000 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் எட்டு மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.

1. நாகப்பட்டினம், கூடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

2. கடலோர பகுதிகளில் மூத்த அதிகாரிகள் முகாமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நாகப்பட்டினத்தில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

3. தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 4 குழுக்கள் நாகப்பட்டினத்தின் முக்கியமான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 6000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புபணியில் ஈடுபட 9000 பேர் தயாராக உள்ளனர்.

5. புயல் கரையை கடந்த பின் மொபைல் சேவைகளில் எந்த இடையூறு இல்லாமல் வழங்க வேண்டுமென்று செல்போன் ஆபரேட்டர்களிடம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

6. இரண்டு கடற்படை கப்பல்கள் நீர்மூழ்கி வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மிதக்கும் படகுகள் மக்களுக்கு உதவ தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7. தெற்கு ரயில்வே நான்கு ரயில்களை ரத்து செய்துள்ளது. அதில் சென்னையிலிருந்து நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்லும் மூன்று ரயில்கள் அடங்கும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் 4 விரைவு ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திற்கு செல்லும் ரயில் மானமதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

8. கடந்த 24 மணிநேரத்தில் கஜா புயல் வலுவடைந்திருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10,500 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

.