New Delhi: புதுடில்லி: இரயில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற போது, இரயில் மோதியதில் 20 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
வடக்கு டில்லி பகுதியில் உள்ள ஹொலம்பி கலன் இரயில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற மாடுகள் மீது, அதிவேக கல்கா சதாப்தி இரயில் மோதியுள்ளது. நேற்று மாலை 5.44 மணி அளவில் நடைப்பெற்ற இந்த விபத்தில், இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 20 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
தண்டாவளத்தை கடக்க முயன்ற மாடுகளை கண்ட இரயில் ஓட்டுனர், அவசர உதவி பிரேக் அழுத்தியும், விபத்தை தடுக்க முடியவில்லை என்று வடக்கு இரயில்வே தெரிவித்துள்ளது
“விபத்தினால், இரயில் தண்டவாளம் சேதமடைந்தது. தண்டவாள சேதத்தை சரி செய்த பின்னர், விபத்து நடந்த பகுதியில் இருந்து மாலை 7 மணிக்கு இரயில் புறப்பட்டு சென்றது” என்று வடக்கு இரயில்வே தெரிவித்துள்ளது