தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் dge.tn.gov.in, dge.tn.nic.in, examresults.net, http://www.results.nic.in/ என்ற இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களின் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 94.80 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 89.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 5.39 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தமாக தமிழகத்தில் உள்ள 7,127 மேல்நிலைப்பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசுப்பள்ளிகள் 85.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சி பெற்றுள்ளன. மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72% தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் பள்ளிகள் 94.81% தேர்ச்சி பெற்றுள்ளன. ஆண்கள் பள்ளிகள் 83.91 தேர்ச்சி பெற்றுள்ளன.
மாவட்ட அளவில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து, 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன.
முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்:
இயற்பியல் 95.94%
வேதியியல் 95.82%
உயிரியல் 96.14%
கணிதம் 96.31%
தாவரவியல் 93.95%
விலங்கியல் 92.97%
கணினி அறிவியல் 99.51%