This Article is From Apr 17, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000ஐ தாண்டியது; 437 பேர் உயிரிழப்பு!

Coronavirus: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000ஐ தாண்டியது; 437 பேர் உயிரிழப்பு!

Coronavirus: கடந்த 24 மணி நேரத்தில் 1,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • கடந்த 24 மணி நேரத்தில் 1,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000ஐ தாண்டியது
  • கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 437 பேர் உயிரிழப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000ஐ தாண்டியது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 1,000 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதித்த 260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல், நேற்று ஒரே நாளில் 183 பேர் குணமடைந்துள்ளனர். 

இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மே முதல் வாரத்தில் உச்சத்தில் இருக்கும் என அரசு மதிப்பீடு செய்துள்ளது. அதனையடுத்து, அந்த எண்ணிக்கையானது குறையும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, அடுத்த ஒரு வாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும், இந்தியா தனது சோதனையை அதிகரிக்க உள்ளது. கடுமையான சுவாச நோய்த்தொற்று தொடர்பான அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.