This Article is From Jan 14, 2019

உ.பி.யில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி! - காங்கிரஸ் அறிவிப்பு

உத்தரபிரதேச மக்களுக்கு காங்கிரஸ் நிறைய செயஅகிலேஷ் யாதவும், மாயாவதியும் தங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது முடிவினை அறிவித்துள்ளார்.

Rahul Gandhi will hold 13 rallies in 13 zones in Uttar Pradesh in February

ஹைலைட்ஸ்

  • Rahul Gandhi is planning to hold 13 rallies in Uttar Pradesh in February
  • He said Congress "has a lot to offer to the people of UP"
  • The plans come after Mayawati, Akhilesh Yadav's tie-up in UP
Lucknow:

வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும், இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத போதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பது என அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் இந்த முடிவு காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் உடனடியாக லக்னோ சென்றார். அம்மாநிலக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவுக்கு எதிராக அணைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இதற்காக அனைத்துக் கட்சிகளையும் தொடர்பு கொண்டு வந்தோம். ஆனால் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உ.பி.யில் எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டனர். எங்களுக்கு கதவு அடைக்கப்பட்ட பின்பு வேறு வழியில்லை. தனித்து போட்டியிடுவது தான் ஒரே வாய்ப்பு. எனவே உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம் என்றார்.

.