Read in English
This Article is From Jun 20, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 14,516 பேருக்கு கொரோனா! 4 லட்சத்தை நெருங்குகிறது ஒட்டு மொத்த பாதிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,95,048 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,68,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர். 12,948 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா

கொரோனா தொற்றால நாடு முழுவதும் இதுவரை 12,948 பேர் உயிரிழந்துள்ளனர்.

Highlights

  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கை 3,95,048 ஆக உள்ளது
  • தற்போது 1,68,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர், 12,948 பேர் உயிரிழந்துள்ளனர்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,95,048 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,68,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர். 12,948 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 14,516 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். அதே போல 375 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 66,16,496 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,89,869 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று நாடு முழுவதும் 12,881 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 13,586 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது 14,516 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisement

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 7.64 சதவிகிதமானோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முன்னிலையில் உள்ளன. மகாராஷ்டிராவில் 1.24 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,893 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

தேசிய தலைநகரான டெல்லியை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 50 ஆயிரத்தினை கடந்துள்ளது.

தமிழகத்தினை பொறுத்த அளவில் 12 நாட்கள் முழு முடக்க நடவடிக்கை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 86 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 4.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்த அளவில் 22 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.1 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதோனம் கெப்ரியஸஸ், “இப்போதுதான் மிக ஆபத்தான மற்றும் புதிய கொரோனா தொற்றுப் பரவல் பிடியில் சிக்கியுள்ளது உலகம். தொடர்ந்து வீட்டிலேயே இருந்து மிக மனத் துயரத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement