Read in English
This Article is From Jun 09, 2019

பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக 14 குழந்தைகள் உயிரிழப்பு

மற்ற குழந்தைகள் தனிவார்டில் வைக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். (File)

Muzaffarpur:


பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறிய்ப்பட்டுள்ளது. பாதிப்புகள் அறியப்பட்ட 38 குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் மற்ற குழந்தைகள் தனிவார்டில் வைக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகளுக்கு கடும் காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement