Rain Alert- சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடனேயே காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை
Rain Alert- தமிழக அளவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை (Weather) எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை மையம் (IMD).
இந்திய வானிலை ஆய்வு மையம், இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக குறிப்பாக, கோயம்புத்தூர் (Coimbatore), நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி (Nellai), விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழக அளவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் சிவகிரி பகுதியில் அதிகபட்சமாக, 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடனேயே காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை,” எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.