நீதிமன்றம் ஜூலை 25 வரை காவலில் வைக்க உத்திரவிட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக பணம் திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- நாகப்பட்டினத்தில் 2பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்தியாவிற்கு வருவதற்கு முன் 6 மாதம் துபாயில் சிறையில் இருந்தனர்
Chennai: தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக டில்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துபாயை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு பணம் திரட்ட உதவியதாக தெரிகிறது.
இந்த நபர்கள் மற்றொரு பயங்கரவாத குழுவான் அல்கொய்தாவை ஆதரிப்பதாகவும் ஏமனில் உள்ள அன்சாருல்லாவுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவை வஹாதத் -இ-இஸ்லாம், ஜமாத் வஹாதத்-இ- இஸ்லாம் ஜிஹாதி இஸ்லாமிய பிரிவு உட்பட பல பெயர்களில் செயல்படக்கூடியவர்களுடன் தொடர்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் அவர்களை ஆறு மாதங்கள் சிறையில் வைத்திருந்தது.
திங்களன்று என்.ஐ.ஏ சென்னையில் சோதனையிட்டது. சென்னை நீதிமன்றம் ஜுலை 25 வரை காவலுக்கு அனுப்பியது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 32 ஆண்டுகளாக துபாயில் தங்கியிருந்தார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. “அவர்கள் தெரிந்தே பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்த நிதி திரட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போரை நடத்த இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஸை நிறுவுவதே சித்தாந்தம் என்று தேசிய புலனாய்வு முகமையின் வழக்கறிஞர் சி.எஸ்.பிள்ளை தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஹரிஷ் முகம்மது மற்றும் ஹாசன் அலி என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். ஹாசன் அலி ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பணிபுரிய ஆட்கள் வேண்டுமென வீடியோ வெளியிட்டார்.
கோயம்புத்தூரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.