சாய் பாபாவை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ஷீரடிக்கு வருகின்றனர்
Mumbai: மகாராஷ்டிரா ஷீரடி சாய்பாபா கோயில், இந்தியாவிலேயே பணக்கார கோயில் என்று பெயர் பெற்றது. இந்த கோயிலுக்கு தற்போது வரும் காணிக்கையே பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. ஷீரடி கோயில் நிர்வாகம், தங்களுக்கு ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 14 லட்ச ரூபாய் மதிப்பில் நாணயங்கள் குவிதாகவும், அதை என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வங்கிக்கு இந்த நாணயங்களை எடுத்துச் சென்றால், இடவசதி குறைவு காரணமாக அதை வாங்க மறுக்கிறார்களாம்.
சாய் பாபாவை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ஷீரடிக்கு வருகின்றனர். அப்படி வரும் பலர், கோயில் உண்டியலில் நன்கொடை மற்றும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் போடுகின்றனர்.
இது குறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானி அறக்கட்டளையின், சி.இ.ஓ, NDTV-யிடம் பேசுகையில், “எங்களுக்கு வரும் காணிக்கை மற்றும் நன்கொடைகளை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை நாங்கள் எண்ணுவோம். அப்படி எண்ணும் போது அது 2 கோடி ரூபாய் பக்கம் வரும். அதில் சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பில் நாணயங்கள் இருக்கும். அதை வங்கிக்கு எடுத்துச் சென்றால் வாங்க மறுக்கின்றனர். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.
சாய்பாபா கோயிலின் அறக்கட்டளைக்கு, 8 வங்கிகளில் கணக்கு இருக்கின்றன.
வங்கிகளுக்கு இடப்பற்றாக்குறை தான் பிரச்னை என்றால், அதையும் நாங்கள் கொடுக்கத் தயார் என்று சொல்லவிட்டோம்” என்று வருத்தப்பட்டார்.
சாய்பாபா கோயிலின் அறக்கட்டளைக்கு, 8 வங்கிகளில் கணக்கு இருக்கின்றன. 8 வங்கிகளும் இடப்பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, நாணயங்களை வாங்க மறுத்தவிட்டனராம். இதனால் கோயில் அறக்கட்டளை, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இது குறித்து முறையிட்டுள்ளது.
இதுவரை கோயிலுக்கு நாணயங்கள் வாயிலாக காணிக்கையாக வந்த 1.5 கோடி ரூபாய் பணம், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நமக்குத் தகவல் வந்துள்ளது.