இரயில்வேயின் கூட்டுப்படையினர் பத்து சிறுமிகள் உள்ளிட்ட 14 சிறுவர்களை அன்ரிசர்வ்டு கோச்சில் இருந்து மீட்டனர்
Rourkela, Odisha: பத்து சிறுமிகள் உள்ளிட்ட பதினான்கு ஜார்க்கண்ட் பழங்குடிச் சிறுவர்கள் தமிழகத்துக்கு இரயிலில் கடத்தப்பட்டு வந்துகொண்டிருந்தபோது மீட்கப்பட்டதாக இரயில்வே போலிசார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களைக் கடத்தியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாடா - ஆலப்புழா விரைவு இரயிலில் சிறுவர்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரயில்வே பாதுகாப்புப் படையினரின் உதவியோடு ராவுர்கேலா (ரூர்கேலா) இரயில்வே போலீசார் (GRP) நேற்று இரவு இரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
"இதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்த பத்து சிறுமிகள் உள்ளிட்ட பதினான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்" என்று ராவுர்கேலா இரயில்வே காவல் ஆணையர் தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த செல்வராஜு (53) என்ற வேலையாட்களை சப்ளை செய்யும் கான்டிராக்டரும் சிறுவர்களைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தொழிற்சாலைகளிலும் வீடுகளிலும் வேலையில் ஈடுபடுத்துவதற்காக, இச்சிறுவர்களை மேற்கண்ட நபர், ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் கரேய்கேலா பகுதியிலிருந்து கடத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.