This Article is From Nov 29, 2018

நியூசிலாந்து தீவருகே கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள் உயிரிழப்பு!

நியூசிலாந்து அரசால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுமார் 145 பைலட்வகை திமிங்கலங்கள் இறந்து கரை ஓதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது

நியூசிலாந்து தீவருகே கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள் உயிரிழப்பு!
Wellington:

நியூசிலாந்து அரசால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுமார் 145 பைலட்வகை திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள சிடீவார்ட் தீவில் உள்ள கடல் பகுதியில் இருந்து சுமார் 30 கீலோமீட்டர் தொலைவில் உள்ள கரை அருகே ஒதுங்கிய இந்த திமிங்கலங்களை அத்தீவில் நடக்கச்சென்ற நபர் பார்த்து போலீசார்க்கு தகவல் அளித்தார்.

பின்னர் போலீசார் மற்றும் மருத்துவக்குழு வந்து அத்திமிங்கலங்களை மீட்பதற்க்கு முன்னரே பாதிக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன.

மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதாலும், இங்குள்ள சாலைகளும் மிக மோசமாக இருந்ததாலும் மீதம் உள்ள திமிங்கலங்களை காப்பாற்ற முடியவில்லை என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

‘உயிருடன் இருக்கும் திமிங்கலங்களும் கடலுக்குள் செல்ல முடியாதெனவும், இந்த சம்பவத்திற்க்கு இயற்கையாகவே பல காரணங்கள் உள்ளதாக' பாதுகாப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் ரென் லெப்பென்ஸ் தெரிவித்தார்.

மேலும் அவர் இதுபோன்ற இறப்புகள் இந்த வாரத்தில் நான்காவது முறை என்பதால் இதுபோன்ற சம்பவங்களால் எல்லோருக்கும் மனவுளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று நார்த் ஐலாந்து எனப்படும் தீவில் கூட 10 பிக்மி கில்லர் திமிங்கலங்கள் இறந்ததாக தகவல் வெளியானது.

ஆண்டிற்கு 85 திமிங்கலங்கள் இறக்கின்ற நிலையில், எண்ணிக்கை அதிகரித்தற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. கடல் அழுத்தம், இயற்கை சூழல், நிலவியல் மாற்றங்கள் என பல காரணங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

.