Read in English
This Article is From Jun 21, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா! ஒட்டுமொத்த பாதிப்பு 4 லட்சத்தினை கடந்தது!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 55.48 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 1.9 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 68,07,226 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் என்பது 7.64 ஆக உள்ளது.

Advertisement
இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 13,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

Highlights

  • 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 15,413 பேருக்கு கொரோனா
  • 1,69,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • 2,27,756 பேர் குணமடைந்துள்ளனர். 13,254பேர் உயிரிழந்துள்ளனர்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4,10,461 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,69,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,27,756 பேர் குணமடைந்துள்ளனர். 13,254பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 15,413 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். அதே போல 306 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.