हिंदी में पढ़ें Read in English
This Article is From May 22, 2019

16 விநாடிகளில் 16,000 டன் ஸ்டீல் க்ளோஸ்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இருக்கிறது மார்ட்டின் டவர்.

Advertisement
விசித்திரம் Edited by

மார்ட்டின் டவரின் தற்போதைய உரிமையாளர், அதை சீர் செய்ய பல கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இருக்கிறது மார்ட்டின் டவர். அந்த டவர் 16 விநாடிகளில் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. அந்த டவர் மொத்தமாக 16,000 டன் எடை கொண்ட இரும்பினால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. 21 மாடிகளில் மார்ட்டின் டவர் கட்டப்பட்டிருந்தது. 

இந்த மாபெரும் கட்டடத்தை தரைமட்டமாக்க சுமார் 219 கிலோ வெடி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சம்பவத்தின் போது அருகில் இருந்தவர்கள், ‘நாங்கள் நினைத்ததை விட அது சத்தமாக இருந்தது. கால்களில் கட்டடம் விழுவதனால் உருவாகும் அதிர்வு அதிகமாக இருந்தது' என்று கூறினர். 

மார்ட்டின் டவர், கடந்த 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக அது காலியாக உள்ளது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர்கள் அந்த கட்டடத்தில் இருந்துள்ளனர். அவர்களின் வியாபாரம் திவாலானதைத் தொடர்ந்து, அது காலியாக இருந்து வருகிறது. 

Advertisement

மார்ட்டின் டவரின் தற்போதைய உரிமையாளர், அதை சீர் செய்ய பல கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், அதை தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் புதியதாக ஓர் அமைப்பை உருவாக்குவது சரியாக அவருக்குப் பட்டது. அதைத் தொடர்ந்துதான் மார்ட்டின் டவரை தரைமட்டமாக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளார். 

Advertisement