ட்ரம்பின் சொந்த முடிவுகளால் அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டபட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- இந்த நிதியை ராணுவ திட்டங்கள், பேரிடர் நிதி,மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம்
- சில குடியரசு கட்சி செனட் உறுப்பினர்களே சுவர் நிதியை எதிர்த்துள்ளனர்
- ட்ரம்ப்புக்கு எதிராக 16 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன
San Francisco, United States: மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். அதற்கு நிதி வேண்டும் என்பதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடணப்படுத்திய ட்ரம்ப்புக்கு எதிராக 16 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ட்ரம்ப் அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளதாக கூறியுள்ளன.
இந்த வழக்கு கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக பயன்படுத்தப்படும் பணம் பல வேலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ராணுவ திட்டங்கள், பேரிடர் நிதி மற்றும் மற்ற மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம் என்ற வாதத்தை கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
சில குடியரசு கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்களே சுவர் நிதியை எதிர்த்துள்ளனர்.
கலிஃபோர்னியா, கொலொரடா, கனெக்டிகுட், டெலேவர், ஹவாய், இலினோஸ், மைனே, மரிலாண்ட், மிட்சிகன், மினேசோட்டா, நெவேடா, நியூ ஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஒரேகான் மற்றும் விஜினியா ஆகிய பகுதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ட்ரம்ப் அரசியலமைபுக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ட்ரம்பின் சொந்த முடிவுகளால் அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டபட்டுள்ளது.
சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்காததற்காக ஏற்கெனவே 35 நாட்கள் அரசை முடக்கினார் ட்ரம்ப். மேலும் காங்கிரஸ் சுவர் எழுப்ப ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்க முடியாது என்று கூறியது.
மேலும் இந்த புகாரில் சூழலியல் சார்ந்த விஷயங்களும் இந்த சுவர் எழுப்புவதில் உள்ளது என்ற விஷயம் பிரதானமாக கூறப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் ராணுவ கட்டமைப்பு மற்றும் மற்ற விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இதற்கு மாற்ற சொல்கிறார் என்ற புகாரும் எழுந்துள்ளது.