हिंदी में पढ़ें
This Article is From Jun 25, 2020

பிரபல டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை! 11 லட்சம் ஃபாலோயர்ஸ் அதிர்ச்சி

தற்கொலை செய்துகொண்ட சிறுமிக்கு டிக்டாக்கில் மட்டும் 11 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் உள்ளன. கடைசியாக 6 நாட்களுக்கு முன்பு நடனம் ஆடி, ஒரு பதிவை டிக்டாக்கில் வெளியிட்டிருந்தார்.

Advertisement
இந்தியா

டிக்டாக் பிரபலத்தின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

New Delhi:

டெல்லியை சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரது ஃபாலோயர்ஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 வயது சிறுமியான அந்த நட்சத்திரத்திற்கு இன்ஸ்டாகிராமிலும் அதிக ஃபாலோயர்ஸ் இருந்துள்ளனர்.

அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். இது தற்கொலைதான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், தற்கொலை சமயத்தில் அவர் கடிதம் எழுதி வைத்தது போன்ற ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் கூறினர்.

Advertisement

தற்கொலை செய்துகொண்ட சிறுமிக்கு டிக்டாக்கில் மட்டும் 11 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் உள்ளன. கடைசியாக 6 நாட்களுக்கு முன்பு நடனம் ஆடி, ஒரு பதிவை டிக்டாக்கில் வெளியிட்டிருந்தார்.

சமீபத்தில்தான் பிரபல இந்தி நடிகர் சுஷந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். லாக்டவுணில் பிரபலங்கள் பலர், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

(If you need support or know someone who does, please reach out to your nearest mental health specialist.)

Helplines:

Advertisement

AASRA: 91-22-27546669 (24 hours)
Sneha Foundation: 91-44-24640050 (24 hours)
Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours)
iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm)
Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

Advertisement