हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 04, 2020

தெலுங்கானாவில் 16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபனுடன் திருமணம்!

போதுமான சட்டங்கள் இருப்பினும் தெலுங்கானாவில் குழந்தைகள் திருமணம் பரவலாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement
Telangana Posted by
Hyderabad:

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டக்களத்தில் உள்ள நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் குண்ட்லபோகம்பள்ளி அருகே மேட்சல் மாவட்டத்தின் காண்ட்லகோயாவில் உள்ள மாதா கோயிலில் கடந்த 1-ம் தேதியன்று 16 வயது சிறுமியை 23 வயது வாலிபனுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து மணமகன், மணமகனின் பெற்றோர், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

பல தரப்பிலிருந்து முன்னெழுந்த கோரிக்கையையடுத்து, மணமகன், மணமகனின் பெற்றோர் மற்றும் உள்ளூர் அரசியல்வாதி உள்ளிட்ட கிராம பெரியவர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்ஸோ, சிறார் பாலியல் வன்புணர்வு (376), மைனர் பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்துதல் (366) ஆகிய சட்டங்கள் மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலாலா ஹக்குலா சங்கத்தின் அச்சுதா ராவ், திருமணத்தை நடத்திய மணமகனின் பெற்றோர், பூசாரி, மற்றும் மணமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்திருந்தார்.

Advertisement

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி, திருமணம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 16 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் ஆறாம் வகுப்பு அல்லது அதற்கு சற்று அதிகமான வயதினைதான் கொண்டிருப்பதாக அச்சுதா ராவ் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறுமி ஒரு வாரத்திற்கு முன்னதாகதான் பருவமெய்தியதாகவும் ராவ் குறிப்பிட்டுள்ளார். 23 வயதான மணமகன் ராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கட்டுமான தொழிலாளியாவார்.

என்டிடிவிக்கு கிடைத்துள்ள வீடியோவில், திருமணத்தில் 50க்கும் குறைவான நபர்கள் பங்கெடுத்திருந்தாலும், சமூக இடைவெளியையோ அல்லது முககவசங்களையோ அணியாமல் திருமணத்தில் மக்கள் பங்கேற்றிருப்பது தெரிய வருகின்றது. இந்த திருமணத்தினை பூசாரி ஒருவர் நடத்தியுள்ளார்.

Advertisement

தற்போது லாக்டவுன் நடைமுறையில் உள்ள காரணத்தினால் இம்மாதம் 8-ம் தேதிக்கு பிறகுதான் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணத்திற்காகாதான் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலம் திறக்கப்பட்டதா என்கிற சந்தேகமும் மேலெழுகின்றது.

சம்பந்தப்பட்ட பூசாரி மற்றும் மணமகன் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராவ் கூறுயுள்ளார். ஏனெனில் திருமணமானது 1-ம் தேதியே முடிவடைந்துள்ளது என்று ராவ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

போதுமான சட்டங்கள் இருப்பினும் தெலுங்கானாவில் குழந்தைகள் திருமணம் பரவலாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement