Read in English
This Article is From Aug 03, 2019

முதலையிடமிருந்து மாமாவை காப்பாற்றி தேசிய விருதுபெற்ற சிறுவன் விபத்தில் உயிரிழப்பு!!

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடை முதல்வர் அறிவித்துள்ளார். சிறுவன் வீர தீரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

Advertisement
இந்தியா Written by , Edited by (with inputs from Agencies)

சித்துவும், அவரது உறவினரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ட்ரக் லாரி அவர்கள் மீது மோதியது.

Bhubaneswar:

முதலையிடம் இருந்து தனது மாமாவை காப்பாற்ற வீர தீரத்திற்கான தேசிய விருதை பெற்ற சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. 

ஒடிசமா மாநிலம் கேந்திரபரா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்து மாலிக்.  இவரது மாமா பினோத் மாலிக் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின்போது முதலையின் வாயில் சிக்கிக் கொண்டார்.

குளத்தில் இருந்து கிராமத்துக்குள் வந்த முதலை ஒன்றும் பினோத்தை கவ்விக் கொண்டது. இதனைப் பார்த்த 15 வயது சிறுவன் சித்து மாலிக், மூங்கில் பிரம்பை எடுத்து முதலையில் தலையில் அடி வெளுத்தார். இதையடுத்து பினோத்தை விடுவித்த முதலை மீண்டும் குளத்தை நோக்கி ஓட்டம் பிடித்தது. 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுவன் சித்துவுக்கு வீர தீரத்திற்கான தேசிய விருதை வழங்கி குடியரசு தலைவர் கவுரவுத்தார். இந்த நிலையில் சித்துவும், அவரது உறவினரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ட்ரக் லாரி அவர்கள் மீது மோதியது.

Advertisement

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சத்தை இழப்பீடாக அறிவித்துள்ளார். 


 

Advertisement
Advertisement