49 வயதாகும் சிந்தியா, கடந்த 2018-ல் மத்திய பிரதேச முதல்வராக விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை.
ஹைலைட்ஸ்
- ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸை விட்டு விலகியதால் மாநில அரசுக்கு சிக்கல்
- சிந்தியாவுக்கு 18 எம்எல்ஏக்கள் வரை ஆதரவு தெரிவிப்பார்கள் என தகவல்
- மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது
New Delhi: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் சிலர் கலகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
சோனியா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது டெல்லியில் உள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இவை முழு பலன் அளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் விளிம்பில் சிக்கிக்கொண்டிருக்கிறது, கட்சித் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த நெருக்கடியின் மையத்தில் உள்ளார். பாஜக முன்னாள் எம்.பி.க்கு விசுவாசமான 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - ஆறு அமைச்சர்கள் உட்பட - தனி விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றிருக்கின்றனர். இந்நிலையில் சிந்தியா பாஜகவில் சேருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷா டெல்லியில் பாஜக தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்வினையொட்டி, காங்கிரசின் ராகுல் காந்தி அக்கட்சித் தலைவரான சோனியா காந்தியுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
- ஜோதிராதித்ய சிந்தியாவை மாநிலங்களவைக்கு அனுப்ப யோசித்துள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் அவரது நெருங்கிய நம்பிக்கையான மாநில சுகாதார மந்திரி துளசி சிலாவத் “கமல்நாத்தை புதிய மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை.
- முதல்வர் கமல்நாத் அமைச்சரவையை மறுசீரமை செய்யப் போராடுவதாகச் சுட்டிக்காட்டினார். நடந்மு முடிந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் "மாஃபியாவின் உதவியுடன் உறுதியற்ற தன்மையை உருவாக்கும் அந்த சக்திகளை நான் வெற்றிபெற விடமாட்டேன் ... அவை அரசாங்கத்தில் ஸ்திரமின்மையை உருவாக்குகின்றன, மத்தியப் பிரதேச மக்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாங்கம்" என்று அவர் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு தெரிவித்திருந்தார்.
- மத்தியப் பிரதேச பாஜகவின் மூத்த தலைவர்கள் - முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் மத்தியப் பிரதேச மொரேனா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் நரேந்திர சிங் தோமர் உட்பட - மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பாஜக தனது எம்.எல்.ஏ.க்களை போபாலுக்கு நாளை மாலை பலம் காட்ட அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகானை சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
- கமல்நாத் அரசாங்கத்தில் 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் - 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 116 என்ற பெரும்பான்மையை விட நான்கு பேர் அதிகமாக அவர் கொண்டிருந்தார். இதில் 114 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், இருவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒரு சமாஜ்வாடி கட்சி மற்றும் நான்கு பேர் சுயேச்சைகள். பாஜகவில் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், தற்போது இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. 17 எம்.எல்.ஏக்கள் வெளியேறினால், கர்நாடகாவுக்குப் பிறகு காங்கிரஸ் தனது இரண்டாவது மாநிலத்தை இழக்கும் நிலை ஏற்பட்டும்.
- 15 மாத கமல்நாத் அரசாங்கத்திடமிருந்து, அதனை மாற்றியமைப்பதற்கான கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கள் செல்ல வேண்டிய இடமாக பெங்களூரு விளங்குகிறது. கடந்த செவ்வாயன்று, டெல்லிக்கு அருகிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிட்டத்தட்ட ஒரு டஜன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முகாமிட்டுள்ளதாக வெளியான செய்திகள், பலவீனமான மத்தியப் பிரதேச அரசாங்கத்தை பாஜக கவிழ்க்கும் அபாயத்தைச் சுட்டிக்காட்டியது. ஒரு சுயாதீன எம்.எல்.ஏ நள்ளிரவுக்குப் பிறகு மூத்த காங்கிரஸ் தலைவர்களால் வியத்தகு முறையில் வெளியே மீட்டு கொண்டுவரப்பட்டார். பின்னர், படிப்படியாகச் சிலர் திரும்பினர், சில எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பொறுப்புக்கள் மறுக்கப்படுவதால் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
- இரண்டு எம்.எல்.ஏ.க்களைத் தவிர மற்ற அனைவரும் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்வுகளால் காங்கிரஸுக்கு நெருக்கடி வெடித்திருக்கலாம். சிந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஏற்படக்கூடும் என்ற செய்திகள் புதிய சிக்கலின் அறிகுறிகளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகள் மிகக் குறைவானதே. சிந்தியாவின் தந்தை மாதவ்ராவ் சிந்தியா ஒரு மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்தார், பாட்டி விஜயராஜே பாஜகவின் முக்கியஸ்தராக இருந்தார். அவரது இரண்டு அத்தைகளும் பாஜகவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 49 வயதாகும் சிந்தியா, கடந்த 2018-ல் மத்திய பிரதேச முதல்வராக விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் வெற்றிக்குக் கணிசமான பங்களிப்பு இருந்தபோதிலும் 23 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மட்டுமே காட்ட முடிந்தது. கமல்நாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் இவர் மாநில காங்கிரஸ் பிரிவின் கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொண்டார்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக உத்தரபிரதேசத்தின் பொதுச் செயலாளராக சிந்தியாவை நியமித்ததார். இதன் பின்னணியில் காங்கிரஸ் உ.பி.யில் பரிதாபமாக தோல்வியுற்றதோடு மத்திய பிரதேசத்தில் தனது தொகுதியான குணாவில் வெறுமனே பிரச்சாரம் செய்த திரு சிந்தியா, 2002 க்குப் பிறகு முதல் முறையாக தோற்றார்.
- கடந்த சில மாதங்களாக, கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் முன்னாள் முதல்வர் திக்விஜயா சிங் தலைமையிலான குழுக்களிடையே மூன்று வழி பிளவு ஏற்பட்டுள்ளதால் காங்கிரசுக்கு ஒரு நெருக்கடி உருவாகி வருகிறது. நவம்பரில், சிந்தியா தனது அரசியல் நம்பகத்தன்மையைப் பற்றிய குறிப்பை அகற்றுவதற்காக தனது ட்விட்டர் கணக்கினை மாற்றி, தன்னை ஒரு "பொது ஊழியர் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்" என்று மட்டுமே குறிப்பிட்டுக்கொண்டார்.