This Article is From Apr 15, 2020

''இந்தியாவில் 170 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்'' - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளனர். 

''இந்தியாவில் 170 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்'' - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் 170 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது
  • சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன
  • தீவிர பாதிப்பு பகுதியில் சென்னையும் இடம்பெற்றுள்ளது
New Delhi:

இந்தியாவில் 170 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் மிதமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 170 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. வீட்டுக்கு வீடு பரிசோதனை, தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

அடுத்த 28 நாட்களுக்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவரும் மீளும் வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஹாட்ஸ்பாட்டாக கண்டறியப்பட்டுள்ள 170 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமே பணிகளை முன்னெடுக்கும் என்று சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி லாவ் அகர்வால் கூறியுள்ளார். 

அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை எவ்வாறு உள்ளது, கொரோனா பரவுதல் நிலைமை உள்ளிட்ட விவரங்களை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பெற்றுக் கொள்ளும். தீவிர தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு ஹாட்ஸ்பாட் பகுதிகள் படிப்படியாக குறைக்கப்படும்.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 20-ம்தேதிக்கு பின்னர் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது. 

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளனர். 

.