This Article is From Jun 19, 2020

“மோதலில் காயமடைந்த 76 ராணுவ வீரர்கள் குணமடைந்து வருகிறார்கள்“: ராணுவம்

கர்னல் பி.கே. சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய துருப்புக்கள் சீன துருப்புக்களுக்கு சொந்தமான கூடாரத்தை அகற்ற முயன்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில்தான் இருபது ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

லடாகில் ஏற்பட்ட மோதலில்தான் இருபது ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • None of the injured soldiers are critical at present, said Army officials
  • 18 of them are at Leh hospital and rest are spread across other hospitals
  • The soldiers were attacked with rods, nail-studded clubs and rocks
New Delhi:

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை மாலை சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த 76 இந்திய வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீண்டும் விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த வீரர்களில், 18 பேர் லேவில் உள்ள மருத்துவமனையில் உள்ளனர், இவர்கள் 15 நாட்களுக்குள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற ராணுவ வீரர்கள் இதர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்னல் பி.கே. சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய துருப்புக்கள் சீன துருப்புக்களுக்கு சொந்தமான கூடாரத்தை அகற்ற முயன்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில்தான் இருபது ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதல் PP-14 அல்லது ரோந்து பகுதி 14 எனப்படும் ஒரு இடத்தில் நடந்துள்ளது, இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது.

இந்த பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள இந்தியாவின் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம், இந்த 15,000 அடி உயர இமயமலை பகுதியிலே திங்களன்று நூற்றுக்கணக்கான வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில், இந்திய வீரர்கள் இரும்புக் கம்பிகளால், முட்கம்பிகளால் மூடப்பட்டிருந்த கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். பிற்பகல் தொடங்கிய இந்த மோதல் நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

சீன தரப்பிலிருந்து உயிரிழப்புகள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. குறைந்தது 45 சீன ராணுவ வீரர்கள் இந்த மோதலில் உயிரிழந்து இருக்கலாம் என அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த மோதலைத் தொடர்ந்து சீன ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்கள் யாரேனும் இருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியிருந்தது. ஆனால், அப்படியான நிகழ்வுக்கு சாத்தியங்கள் ஏதும் இல்லையென ராணுவ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்து நாளிதழில் இது குறித்து வெளியான சந்தேகங்களுக்கு பதிலளிக்காமல், “இந்த மோதலில் யாரும் காணமல் போகவில்லை“ என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். சீனா தனது நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்து சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

லடாக்கில் நடந்த இந்த இந்தியா - சீனா வீரர்கள் மோதலில், ராணுவ வீரர்கள் ஒரு உயரமான பாறைகளில் இருந்து பனிக்கட்டிகளுக்குள் வீரர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர் என்பதை கால்வான் நதி செயற்கைக்கோள் வரைபடங்கள் விளக்குகிறது.

இந்த மோதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதே தெலுங்கானாவில்  போல கர்னல் பி.கே. சந்தோஷ் பாபுவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

.